பெங்களுரு
ஆன்மீக தலைவரும் வாழும் கலை அமைப்பின் நிருவனுருமான குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் 3 நாட்கள் பாகிஸ்தான் நாட்டிற்கு அமைதி பயணம் மேற்கொள்ள இருக்கிறார்
குருஜி பாகிஸ்தான் செல்வது , இது இரண்டாவது முறையாகும். ஜூலை 2004- இல் முதல் முறையாக பயணம் மேற்கொண்டார் என வாழும் கலை அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் விஜயத்தின் போது குருஜி அவர்கள் அந்நாட்டின் ஆன்மீக தலைவர்கள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், மாணவ அமைப்புகள் மற்றும் கருத்து உருவாக்குனர்கள் ஆகியோர்களை சந்தித்து இரு நாட்டு இடையே ஆனா உறவை வலுபடுத்தும் திட்டங்களை மேற்கொள்வார். மேலும் அந்நாட்டின் அரசியல் தலைவர்களையும் அவர் சந்திக்க இருப்பதாக தெரிவித்தனர்.
குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் வாகா எல்லை வழியாக லாகூர் விஜயம் செய்து, அங்கிருந்து இஸ்லாமாபாத் மற்றும் கராச்சிக்கு தன் பயணத்தை தொடர்கிறார்.
வாழும் கலை அமைப்பின் , பாகிஸ்தான் நாட்டின் இயக்குனர் மற்றும் வாழும் கலை ஆசிரியரும் ஆனா திரு. நயீம் சமீந்தார் தெரிவிக்கும் பொழுது, " மன அழுத்தமற்ற , வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் பாகிஸ்தானிய வாழும் கலை ஆசிரியர்கள் மன அழுத்தத்தை போக்கும் பயிற்சிகளை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானில் உள்ள 8 ஆசிரியர்கள் மூலமாக பல ஆயிரக்கனக்கானோர் அந்நாட்டில் வாழும் கலை பயிசிகளை கற்றுக்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment