Monday, March 12, 2012

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பாகிஸ்தான் நாட்டிற்கு இன்று அமைதி பயணம்


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பாகிஸ்தான் நாட்டிற்கு இன்று அமைதி பயணம் 

மதங்களுக்கு இடையே அமைதி மற்றும் இணக்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு வாழும்  கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் பாகிஸ்தான் நாட்டிற்கு இன்று விஜயம் செய்தார். மூன்று நாட்கள் அங்கு விஜயம் செய்யும் ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் இன்று வாகா எல்லை வழியாக லாகூர் சென்றடைந்தார். அவருக்கு பாகிஸ்தான் அரசு வாகா எல்லையிலிருந்து முழு பாதுகாப்பு அளித்தது.

அங்கிருந்து அவர் புறப்பட்டு, அவரை காண காத்திருந்த முக்கிய விருந்தினர்களிடையே உரை ஆற்றினார். ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் பேசும்பொழுது , " வன்முறையற்ற பாகிஸ்தானை காண்பது தான் என்னுடைய கனவு" என்றும் " அது கண்டிப்பாக அது சாத்தியம் " என்றும் கூறினார். 

பாகிஸ்தான் டுடே பத்திரிகையின் ஆசிரியர் திரு.ஆரிப் நிசாமி, பாகிஸ்தான் அரசின் முன்னாள் நிதி அமைச்சர் திரு. சர்தாஜ் அசிஸ் , பாகிஸ்தான் முஸ்லிம் லீக் காயீத் அமைப்பை சேர்ந்த செல்வி.ஹுமாரியா ஷாஹிட் மற்றும் பாகிஸ்தான் டேஹ்ரிக் இ இன்சாப் அமைப்பின் செயலர் திரு. ஓமர் சீமா போன்ற முக்கிய விருந்தினர்கள் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

மேலும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு, லஹூரில் உள்ள FC கல்லூரிக்கு உரை ஆற்ற சென்றார். அங்கே அரங்கு நிறைந்த மாணவர் கூட்டம் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தது. மாணவர்களிடையே உரை ஆற்றும்போது ஸ்ரீ ஸ்ரீ அவர்கள், " கடவுள் ஒருவரே. இஸ்லாமில் அல்லாஹ்விற்கு 99 பெயர்கள் இருப்பது போல் இந்து மதத்திலும் ஒரே கடவுளுக்கு 108 வடிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சிலைகள் ஒரு அடையாளத்துக்காக மட்டும் தான்"

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் வரலாற்றில் தற்பொழுது நிலவும் இக்கட்டான நிலையில் , ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் இந்த விஜயத்தின் நோக்கம் இரு நாடுகளிடையே நட்புறவை வளர்த்தல், புரிந்துணவு மற்றும் பேச்சுவார்த்தை மூலம் அமைதியான தீர்வை காண்பதாகும். 
அமைதியை வலியுறுத்தும் நோக்கமாக ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் மேற்கொண்டுள்ள இந்த மூன்று நாட்கள் பயணத்தில், அவர் பாகிஸ்தான் நாட்டின் முக்கிய தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், ஆன்மீகத்தலைவர்கள், மாணவ அமைப்புகள் மற்றும் கருத்துருவாகுனர்கள் ஆகியோர்களை இரு நாடுகளிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதற்காக சந்திக்க உள்ளார். மேலும் ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் பாகிஸ்தான் நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களையும் சந்திக்க உள்ளார்.






பாகிஸ்தான் நாட்டிற்கு ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் செல்வது இது இரண்டாவது முறையாகும். முதன் முதலில் ஜூலை 2004 இல் விஜயம் செய்தார். 

No comments:

Post a Comment