Wednesday, June 3, 2015

ஈராக் நாட்டில் வாழும் கலை அமைப்பின் ஆயுர்வேத மருத்துவமனை

ஈராக் நாட்டில் வாழும் கலை அமைப்பின் 
ஆயுர்வேத மருத்துவமனை 

வாழும் கலை அமைப்பு இராக் நாட்டிலுள்ள குர்திஸ்தானில் தனது முதல் ஆயுர்வேத சிகிச்சை  மையத்தை ஜூன் 2ம் திகதி துவங்கியுள்ளது. குர்திஸ்தானின் சுகாதார அமைச்சர் திரு.  ரிகோட் ஹமாஹ் ராசிட் இதனை துவங்கி வைத்தார் 

வாழும் கலை அமைப்பின் சகோதர அமைப்பான சர்வேதேச மனித பண்புகள் அமைப்பின் இயக்குனர் திருமதி மாவாஹிப் ஷைபானி ஈராக்கில்  கூறும்பொழுது " ஆயுர்வேத சிகிச்சை முறையை  ஈராக்கில் அறிமுகபடுத்துவதன் மூலமாக , ஈராக் மக்களுக்கு ஒரு முழுமையான ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்க உதவுகிறோம் . இந்த சிகிச்சை  அவர்களுக்கு  உடல்,மனம்  மற்றும் ஆன்ம நிலையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் "

ஆயுர்வேத சிகிச்சை முறைகளான பஞ்சகர்மா , மர்மா, அபயங்கா , நாடி பரிசோதனை மற்றுமல்லாது மூட்டு, தண்டுவடம் இவைகளுக்கான சிகிச்சையும் இந்த மையத்தில் வழங்கப்படும். ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேத மருத்துவமனையை  சேர்ந்த மருத்துவர் திரு.விஷ்ணு பிரசாத்  மற்றும் இரண்டு பிணி  நீக்கும் வல்லுனர்களும் இணைந்து இராக் மக்களுக்கு தேவையான சிக்ட்சைகளை இந்த மையத்தில் அளிப்பார்கள் 

மன அழுத்தத்துடன் இருக்கும் பெரும்பாலான மக்களுக்கு, ஆயுர்வேத சிகிச்சை மற்றும் யோகாவும் நல்ல மாற்றத்தை  தரும் என மருத்துவர் திரு.விஷ்ணு பிரசாத் தெரிவித்தார்.


No comments:

Post a Comment