Tuesday, January 10, 2017

ஜல்லிக்கட்டு குறித்து வாழும்கலை அமைப்பின் நிறுவனர் குருதேவ் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்களின் கருத்து

#ஜல்லிக்கட்டு குறித்து #வாழும்கலை அமைப்பின் நிறுவனர் #குருதேவ் #ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்களின் கருத்து 

Friday, March 18, 2016

யமுனையில் ஒரு கும்பமேளா

தேவலோகம்
சொர்க்கம் எப்படி இருக்கும் என்று கற்பனையில் மட்டுமே பார்த்த நமக்கு தேவலோகத்தை சொர்கத்தை காட்டிய பெருமை சொர்கத்திலே மூன்று நாட்கள் தெய்வத்தோடு வாழவைத்த பெருமை வாழும் கலையின் நிறுவனர் குருஜி ஸ்ரீஸ்ரீ அவர்களையே சாரும்.155 நாடுகளை சேர்ந்த 35 லட்சம் மக்களை எந்த வித பாகுபாடுகளும் இல்லாமல் அனைவரையும் 3 நாட்கள் ஒரே இடத்தில் சேர வைத்த இருக்க வைத்த  பெருமையும் குருஜி அவர்களையே சாரும் என்பதில் மாற்று கருத்து இல்லை.முதல் நாள் முதல் மூன்றாம் நாள் முதல் எத்தனை எத்தனை வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் உலக நாடுகள் முழுவதும் இருந்து வந்த லட்ச கணக்கான மக்களை தலைவர்களை மகிழ்விக்க ஆயிர கணக்கான கலைஞர்கள் பங்கேற்ற கண்கவர் கலைநிகழ்ச்சிகள் என திருவிழா கோலம் பூண்டது நமது தலை நகர் டெல்லி.எந்த ஒரு சிறிய விஷயம் நடந்தாலும் அதற்க்கு கடவுளின் ஆசிர்வாதமும் குருவின் ஆசிர்வாதமும் அவசியம் . அப்பேற்பட்ட மகிமை பொருந்திய  அந்த குருவே ஏற்பாடு செய்த இப்பேற்பட்ட உலக வரலாற்று மிக்க சிறப்பு நிகழ்வுக்கு இயற்கையின் ஆசிர்வாதமும் கடவுளின் ஆசிர்வாதமும் கிடைக்காமல் இருக்குமா அதுவும் கிடைத்தது  மழையின் ரூபத்தில் இயற்கையும் கடவுளும் குருஜி மீது மழையாக பெய்து  தங்கள் ஆசிர்வாதத்தை கொடுத்து இத்தனை புனிதமான ஒரு நிகழ்வுக்கு மேலும் புனிதத்தை சேர்த்தது ஒரு அறிய நிகழ்வு.அத்தோடு நிற்கவில்லை ஒவ்வொரு நாளும் உலகநாடுகளில் இருந்து வந்த கலைஞர்களின் கண்கவர் நிகழ்சிகளை பார்க்க கடவுளே வானவில்லாக வந்து பூமியிலே நடக்கும் இப்பேற்பட்ட விட விதமான வண்ணங்களுக்கு இணையாக வானத்தில் வானவில் தோன்றி பூமியும் வானமும் வண்ண மயமாக கட்சி அளித்தது மற்றுமொரு அறிய நிகழ்வு.ஒரு நாட்டில் இருந்து கொண்டு அவரவர் கலாசாரமே தெரியாமல் எத்தனையோ கோடி மக்கள் இருக்கும் போது, உலகம் முழுவதும் உள்ள மக்களின் பாரம்பரிய  அரிய கலாசார நிகழ்வுகளை ஒரே இடத்தில் அதுவும் நம் இந்தியாவின் தலை நகரத்தில் எந்த வித சிறு அசம்பாவிதமும் இல்லாமல்  நடத்திய பெருமையும் குருஜி அவர்களை மட்டுமே சாரும்.
பொதுவாகவே மனித இயல்பு எந்த ஒரு நல்ல நிகழ்வுகளையும் கெடுக்கவேண்டும் நடக்கவிடாமல் தடுக்கவேண்டும் என்று ஒரு சிலர் நினைப்பதுண்டு .இந்த அற்புதமான நிகழ்வுகளையும் தடுக்கவேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்ள பட்டன இயற்கையை சீரழித்து விட்டார்கள் ஒரு புகாரும் தரப்பட்டது.அவர்களுக்கு ஏனோ தெரியவில்லை இயற்கையை இயற்கையாக இருக்க வேண்டும் என்று குருஜி அவர்கள் உலகம் முழுவதும் மேற்கொண்ட நடவடிக்கைகள் எத்தனை எத்தனை என்று.அதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் எத்தனை எத்தனை என்று.இந்த உலக கலாசார விழாவை இந்தியாவில் நடத்தி ஒட்டு மொத்த நாட்டிற்கும் எவ்வளவு பெருமையை தேடி தந்துள்ளார் என்பது சிறிது யோசித்து பார்த்தால் மட்டுமே தெரியும். 500 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் ஒரு சாதாரண திருமண நிகழ்விர்க்கே எத்தனை மாதங்கள் கஷ்டப்பட்டு எத்தனை வேலைகளை செய்யவேண்டும். ஆனால் இப்பேற்பட்ட அரிய நிகழ்விற்கு உலக தலைவர்கள் அனைவரையும் வரவைத்து உலகம் முழுவதும் 35 லட்சம் மக்களை ஒரே இடத்தில் இருக்க வைத்து .பல்லாயிர கணக்கான இசை கலைஞர்களை  இது வரை யாருமே பார்க்காத கலைகளை இங்கே நிகழ்த்தி இப்பேற்பட்ட ஒரு வரலாற்று நிகழ்வு இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் காண கிடைக்குமோ ??????? இந்த ஒரு அரிய நிகழ்விற்கு  பின்னால் எத்தனை பேர் தங்களின் உடல் உழைப்பை கொடுத்திருப்பார்கள். இது நடந்து முடிந்த பின்னர் என்னக்கென்ன  என்று செல்லமால் அந்த இடத்தை தூய்மைபடுத்த குருஜியே  நேரில் சென்று அணைத்து ஏற்பாடுகளையும் செய்து உடனடியாக அந்த இடம் சுத்தம் செய்ய நடவடிக்கைகளையும் செய்துள்ளார் என்றால் அவரது எண்ணம் எப்பேற்பட்டதாக இருக்கும் என்பது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.அதனால் தான் உலகம் முழுவதும் உள்ள கோடிகணக்கான மக்களும் அரசியல் மற்றும் அனைத்து மதத்தலைவர்களும் குருஜி அவர்களை போற்றுகின்றனர் வரவேற்கின்றனர் அவரின் அறிவுரையை கேட்கின்றனர்.

ஜெய் குருதேவ்.
குருமூர்த்தி
சென்னை
9710282282Monday, September 28, 2015

நடிகர் சந்தானம் அவர்களின் வாழும் கலை பயிற்சி அனுபவம்

Famous ‪#‎Tamil‬ Actor Sri. Santhanam Shares his ‪#‎ArtofLiving‬‪#‎SudarsanKriya‬ Experience in the presence of Gurudev H H Sri Sri Ravi Shankar at Art of Living International Ashram
 நடிகர் சந்தானம் அவர்கள் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களை பெங்களூரில் உள்ள வாழும் கலை அமைப்பின் சர்வேதேச ஆசிரமத்தில் சந்தித்து ஆசி பெற்றார். மேலும்  வாழும் கலை பயிற்சியில் உள்ள சுதர்சன கிரியா மூலம் கிடைத்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். அந்த காணொளி இதோ 
Tuesday, August 4, 2015

பழனிகவுண்டன்புதூர் கிராமத்தில் அரசு மதுபான கடை மூடப்பட்டது

ஆன்மீக தலைவர் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும்கலை அமைப்பின்  தொண்டர்கள் மற்றும்  கிராம மக்களின் தொடர் அமைதி போராட்டத்தின் காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள பழனிகவுண்டன்புதூர் கிராமத்தில் உள்ள  அரசு மதுபான கடை நேற்றிரவு மூடப்பட்டது.  இந்த புரட்சிக்கு உறுதுணையாக இருந்த கிராம பஞ்சாயத்து தலைவி திருமதி.காந்திமதி அவர்களுக்கும் பொள்ளாச்சி வாழும் கலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.அரசு, வாழும் கலை ஆசிரியை திருமதி கவிதா அரசு  மற்றும் தன்னார்வ தொண்டர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

Sunday, July 26, 2015

இசை கலைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

வாழும் கலையின் 35 வது ஆண்டு விழா  இந்தியாவின் தலைநகர் டில்லியில் 2016 ம் வருடம் மார்ச் மாதம் 11, 12, 13 ஆகிய திகதிகளில் "உலக கலாச்சார சார திருவிழா " (World Culture Festival ) என மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது . இதில் பல்வேறு நாடுகளிலிருந்து ஜனாதிபதிகள் , பிரதமர்கள் , அமைச்சர்கள் ,தூதுவர்கள் , பல்சமய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள்  என 50 இலட்சம் பேர் கலந்து கொள்ள இருக்கிறார்கள் . இதில் மிக பிரம்மாண்டமான மேடையில் 15000 இசை கலைஞர்கள் ஒன்று சேர்ந்து இந்திய பாரம்பரிய இசையை இசைக்க   இருக்கிறார்கள். கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற போகும் இந்த நிகழ்வில் பங்கு கொள்ள விரும்பும் இசை கலைஞர்கள் கீழ் கண்ட எண்களிற்கு தொடர்பு   கொள்ளவும். டெல்லி  சென்று வருவதற்கும் அங்கு தங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்படும்

1RAJI SWAMINATHAN - CHENNAI 9884017767
2 SRINIVASAN - CHENNAI 9444406113
3 ARAVIND SOUNDARAJAN - CHENNAI 9677164072
4 SASIREKHA VENGATESH - COIMBATORE 9842236181
5 KARUNYA - COIMBATORE 9488075555
6 MANIKANDAN - NAGARKOIL 9894320282

25 லட்சம்  பேர் கலந்து கொண்ட வாழும் கலை அமைப்பின் 25வது ஆண்டு விழா மற்றும் ஜெர்மனியில் நடைபெற்ற 30வது ஆண்டு விழா காணொளி

Sunday, June 28, 2015

கொலம்பியா நாட்டில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் அமைதிக்கான நடவடிக்கைகள்

H H Sri Sri Ravi Shankar பரம பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் ஆலோசனைப்படி கொலம்பியாவின் போராளி குழு FARC தலைவர் இவான் மார்கிஸ் வன்முறையை கைவிட்டு காந்தியின் அஹிம்சை வழியில் போராட முடிவு

Thursday, June 25, 2015

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களுக்கு கொலம்பியா நாட்டின் மிக உயரிய விருது


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களுக்கு கொலம்பியா நாட்டின் மிக உயரிய விருது 
இந்திய ஆன்மீக தலைவர் மற்றும் வாழும் கலை அமைப்பின் நிறுவனருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களுக்கு கொலம்பியா நாட்டின் மிக உயர்ந்த சைமன்  பொலிவர்  விருது வழங்கப்பட்டுள்ளது

சமுதாயத்தில் அமைதி ஏற்படுத்தும் நடவடிக்கை, போர் காலங்களில் மத்தியஸ்தம் மேலும் யோகா  மற்றும் மூச்சு பயிற்சி மூலம் மன அழுத்தத்தை குறைத்து வன்முறைக்கு எதிராக போராடுவது ஆகிய செயல்களுக்காக
அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது . கொலம்பியாவின் ஜனாதிபதி அனுப்பி உள்ள கடிதத்தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் சேவை அங்கீகரிக்க பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார் . மேலும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களை இந்த விருதை பெற்றதற்காக பாராட்டு தெரிவித்துள்ளார்