Sunday, June 28, 2015
கொலம்பியா நாட்டில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் அமைதிக்கான நடவடிக்கைகள்
H H Sri Sri Ravi Shankar பரம பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் ஆலோசனைப்படி கொலம்பியாவின் போராளி குழு FARC தலைவர் இவான் மார்கிஸ் வன்முறையை கைவிட்டு காந்தியின் அஹிம்சை வழியில் போராட முடிவு
Thursday, June 25, 2015
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களுக்கு கொலம்பியா நாட்டின் மிக உயரிய விருது
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களுக்கு கொலம்பியா நாட்டின் மிக உயரிய விருது
இந்திய ஆன்மீக தலைவர் மற்றும் வாழும் கலை அமைப்பின் நிறுவனருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களுக்கு கொலம்பியா நாட்டின் மிக உயர்ந்த சைமன் பொலிவர் விருது வழங்கப்பட்டுள்ளது
சமுதாயத்தில் அமைதி ஏற்படுத்தும் நடவடிக்கை, போர் காலங்களில் மத்தியஸ்தம் மேலும் யோகா மற்றும் மூச்சு பயிற்சி மூலம் மன அழுத்தத்தை குறைத்து வன்முறைக்கு எதிராக போராடுவது ஆகிய செயல்களுக்காக
அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது . கொலம்பியாவின் ஜனாதிபதி அனுப்பி உள்ள கடிதத்தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் சேவை அங்கீகரிக்க பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார் . மேலும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களை இந்த விருதை பெற்றதற்காக பாராட்டு தெரிவித்துள்ளார்
Wednesday, June 3, 2015
ஈராக் நாட்டில் வாழும் கலை அமைப்பின் ஆயுர்வேத மருத்துவமனை
ஈராக் நாட்டில் வாழும் கலை அமைப்பின்
ஆயுர்வேத மருத்துவமனை
வாழும் கலை அமைப்பு இராக் நாட்டிலுள்ள குர்திஸ்தானில் தனது முதல் ஆயுர்வேத சிகிச்சை மையத்தை ஜூன் 2ம் திகதி துவங்கியுள்ளது. குர்திஸ்தானின் சுகாதார அமைச்சர் திரு. ரிகோட் ஹமாஹ் ராசிட் இதனை துவங்கி வைத்தார்
வாழும் கலை அமைப்பின் சகோதர அமைப்பான சர்வேதேச மனித பண்புகள் அமைப்பின் இயக்குனர் திருமதி மாவாஹிப் ஷைபானி ஈராக்கில் கூறும்பொழுது " ஆயுர்வேத சிகிச்சை முறையை ஈராக்கில் அறிமுகபடுத்துவதன் மூலமாக , ஈராக் மக்களுக்கு ஒரு முழுமையான ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்க உதவுகிறோம் . இந்த சிகிச்சை அவர்களுக்கு உடல்,மனம் மற்றும் ஆன்ம நிலையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் "
ஆயுர்வேத சிகிச்சை முறைகளான பஞ்சகர்மா , மர்மா, அபயங்கா , நாடி பரிசோதனை மற்றுமல்லாது மூட்டு, தண்டுவடம் இவைகளுக்கான சிகிச்சையும் இந்த மையத்தில் வழங்கப்படும். ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேத மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் திரு.விஷ்ணு பிரசாத் மற்றும் இரண்டு பிணி நீக்கும் வல்லுனர்களும் இணைந்து இராக் மக்களுக்கு தேவையான சிக்ட்சைகளை இந்த மையத்தில் அளிப்பார்கள்
Subscribe to:
Posts (Atom)