Monday, October 3, 2011

உலகை ஒரு நல்ல இடமாக செய்தல் மற்றும் உலக அமைதிக்கான அழைப்பு - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

உலகை ஒரு நல்ல இடமாக செய்தல் மற்றும் உலக அமைதிக்கான அழைப்பு - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் 
Time: 
 09/21/2011


2011ல் முன் நிகழாத சமூக புரட்சி, ராணுவ சச்சரவு, இயற்கைப் பேரழிவு நடந்திருக்கிறது. பொருளாதார வேகக் குறைவும் இதனுதன் சேர்ந்து உலகில் உள்ள சவால்களை மேலும் சிக்கலுள்ளதாக தோன்ற செய்கிறது. அனால் இப்பொழுது உலகம் முன் நிகழாத அளவு சார்ந்திருக்கிறது. ஒரு நாட்டின் பொருளாதாரம் உலகை பாதிக்கும் என்பதை ஐரோப்பாவில் நடந்து வரும் கடன் நெருக்கடி காட்டி இருக்கிறது. கால மாற்றம், அதிகரித்துவரும் உணவுப்பற்றாக்குறை, நீரின் பற்றாக்குறை ஆகிய இடுவுகளை நாம் சேர்ந்து சந்திக்க வேண்டும் - முழு உலகுமும் இவைகளை சேர்ந்து சந்திக்க வேண்டும்.

இத்தகைய சவால்களைசந்திக்க ஒருவருக்கு சாந்தமான மனதும் பரந்த நோக்கமும் தேவை. இணக்கம் ஏற்படுத்த சச்சரவை (உள்ளே மற்றும் வெளியே நடைபெறும்) வெற்றிகரமாக சந்திக்க வேண்டும். நீ அனுபவிக்கும் ஆவேசங்கள் உன் மூச்சை பதிப்பதை நீ கவனித்திருப்பாய். கோவம் வரும் பொழுது மூச்சு வேகமாகவும் குறுகியதாகவும் இருக்கும். ஆசுவாசமாக இருக்கும் பொழுது நீளமாகவும் ஆழமாகவும் இருக்கும். எப்படி மனது மூச்சை பாதிக்கிறதோ, அதே போல் மூச்சினால் மனதின் நிலையை பாதிக்க முடியும். மூச்சை ஒரு கருவியாக பயன் படுத்தி ஒருவரால் சாந்தமான மனதை அடைய முடியும். மனது சாந்தமாக இருந்தால் சூழ்நிலையை தெளிவாக அறிந்து கொள்ள முடியும். இத்தகைய மேம்பட்ட ஆற்றலால் உன்னால் சூழ்நிலைக்க்குத் தேவையான மேலும் நல்ல தீர்மானங்களை எடுக்க முடியும்.


கருத்துப் பரிமாற்றத்தை மேம்படுத்துதல்

கருத்துப் பரிமாற்றத்தை மேம்படுத்துதல் மனதில் சச்சரவு வரும் பொழுது ஒருவரின் மனத்தால் உணரும் திறன், கவணித்தல் மற்றும் கருத்தை வெளிபடுத்தும் திறன் பாதிக்கப் படுகிறது. இவை மற்றவருடன் கருத்துப் பரிமாறும் திறனை பாதிக்கிறது. சச்சரவுப் பகுதிகளில் தீர்மானம் கொண்டு வர முதலில் கருத்துப் பரிமாருதலில் மேம்பாடு கொண்டு வர வேண்டும். இது மனது சாந்தமாக இருக்கும் பொழுது தான் வரும். மனது சாந்தமாக மன வேதனைகளை முதலில் போக்க வேண்டும். வாழும் கலையின் தொண்டர்கள் தியானத்தினாலும், தளம் வாய்ந்த மூசுப்பயிர்ச்சிகளாலும் சச்சரவுப் பகுதிகளில் மன தளர்வினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வெற்றிகரமாக நிவாரணம் அளித்திருக்கின்றனர்.

கருத்துப் பரிமாறும் திறனை மேம்படுத்த இன்னொரு வழி ஒருவரின் நோக்கத்தை பறந்ததாக வைத்துக்கொள்வதே. மேலும் ஒவ்வொரு குற்றவாளியிலும் ஒரு பாதிக்கப்பட்டவரும் இருக்கிறார் என்பதை காண வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்தால் குற்றவாளி தானாக மறைந்து விடுவான். ஒருவரை தன மனத் தளர்விலிருந்து வெளியேற நாம் உதவி செய்ய வேண்டும். முரண்பாடு கொண்டிருக்கும் குழுக்களின் இடையில் நம்பிக்கையை வளர்க்க வேண்டும். சமமான மனது, ஞானம், வாழ்க்கையில் ஒருமுகப்படுத்தக்கூடிய அணுகுமுறையுடன் இருக்கும் ஒருவர் தலையிட்டால், சச்சர்விர்ற்கு தீர்வில் முன்னேற்றம் நடக்கும். சித்தாந்த வேறுபாடோ, அல்லது குழுக்களின் இடையே அரசியல் விளையாட்டோ, கருத்துப்பரிமார்ரத்தை மேம்படுத்த எப்பொழுதும் வரையெல்லை இருக்கிறது.

வாழும் கலை ஐவோரி கோஸ்ட், கொசோவோ, ஜம்மு காஷ்மீர், பீகார், ஈராக், இலங்கை ஆகிய இடங்களில் சமூகத்தில் நம்பிக்கையை வளர்த்திருக்கிறது. உதாரணமாக, இராக்கிலிருந்து 50 இளைஞர்கள் இளைஞர் தலைவர் பயிற்சி எடுத்து இப்பொழுது அமைதியின் தூதுவராகியிருக்கிறார்கள். ஈராக்கின் பெண்களும் இந்த பயிற்ச்சியில் கலந்து கொண்டனர். இந்தியாவில் இப்பொழுது இருக்கும் மிகப்பெரிய சவால் மாவோயியவாதி கிளர்ச்சியே (சிகப்புத் தீவிரவாதம்). வாழும் கலை பாதிக்கப்பட்டப் பகுதிகளில் விசாலமாந வேலை செய்திருக்கிறது. மாவோயியவாதிகள் இருக்கும் பகுதியின் மத்தியில் பட்மடா என்னும் கிராமத்தில் ஒரு புகலிடத்தை கட்டியுள்ளனர்.

கல்வியில் மாற்றம்

தீவிரவாதத்தின் வேர்கள் மத உருவேற்றம், ஏழ்மை, மற்றும் இன அடையாளத்தில் உள்ளன. தீவிரவாதிகள் கடவுளின் பெயரில் மற்ற சமூகங்களை வெறுக்க மறவாதிருக்கச்செய்கிறார்கள். ஏழ்மையை நீக்கவும், கல்வியை கொண்டு வரவும் பொருளாதார மடமையுள்ள சமூகங்களை குவிமையமாக வைத்துக் கொண்டு, வாழும் கலை 185 பள்ளிகளை தொடங்கியிருக்கிறது. ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு இப்பொழுது இலவசக் கல்வி கிடைக்கிறது. இது மூலம் அவர்கள் அஹிம்சையின் நெறிமுறைகலை உட்கிரகின்றனர்.

உலகில் இருக்கும் மக்களில் ஒரு மிக சிறிய பிரிவினர் தன வழிதான் சேரி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். முழு உலகமும் அந்த வழியைத்தான் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்கிறார்கள். இத்தகைய நோக்கத்தை மாற்ற வழி நம் கல்வியை பல்-பண்பாடு மற்றும் பல்-மதமாய் ஆக்க வேண்டும். சிறு வயதிலிருந்தே வேறுபாடை மனதால் ஏற்றுக்கொள்ளும் பாவத்தை வளர்க்க வேண்டும்.

ஆன்மிகம் நம் நோக்கத்தை அகன்றித்து, ஏற்றுக் கொள்ளும் திறனை அதிகரிக்கிறது. வாழ்க்கையில் ஆன்மீகத்திற்கு மதிப்புக் கொடுத்தால் பொறுப்புணர்ச்சியும், எல்லோருடனும் சேர்ந்திருக்கும் பாவமும் வளரும். ஆன்மா வாழ்க்கையை தூக்கிநிறுத்தி தாக்குப்பிடிகிறது. ஒருவருக்குபலமும் திடமும் அளிக்கிறது. சாதி மத பேதங்களின் குறுகிய எல்லைகளை உடைக்கிறது. ஒருவருக்குள் விழிப்புணர்வை தூண்டுகிறது -- ஆன்மாவின் இந்த உயர்த்தல் -- இதனால் போர்களை நிறுத்த முடியும், மனித உரிமைகளை புணருத்தாரனம் செய்ய முடியும்.

எப்பொழுதெல்லாம் பிரிவு இருக்கிறதோ, எப்பொழுது நாம் மற்றவரை "வேறு" அல்லது "பகைவன்" என்று கருதுகிறோமோ, அப்பொழுதெல்லாம் வன்முறைக்கு வாய்ப்பு ஏற்படுகிறது. எப்பொழுது "இணைப்பு" உணர்ச்சி வளர்கிறதோ, அப்பொழுது அன்பு, பாசம், தயவு இதெல்லாம் தான் காண முடியும். ஒருவருள் மனிதாபிமானத்தை கண்ட பிறகு அவர் மேல் வன்முறைத் தாக்குதல் செய்ய முடியாது.

உலக அமைதி தினமான இன்று, நான் எல்ல நாடுகளையும் சேர்ந்த் வரத் தூண்டுகிறேன் -- தம் பாதுகாப்பு வரவு செலவு திட்டத்தில் ஒரு சிறிய பகுதியை அமைதியை வளர்க்கும் கல்விக்கு ஒதுக்கக் கேட்டுக்கொள்கிறேன். கல்வியினால் தான் எல்லோரும் அன்போடும், தயவோடும், புரிந்துணர்வோடும், மற்றும் வெறுப்பில்லாத உலகம் ஒன்றை உருவாக்க முடியும்.

என் நோக்கம் வன்முறையற்ற மனச் சோர்வற்ற ஒரு உலகமே. அத்தகைய உலகை உருவாக்க நாங்கள் முயற்சி செய்துக் கொண்டிருக்கிறோம். மேலும் மக்கள் முன்னே வந்து உலகில் ஒவ்வொரு மூலையிலும் அமைதியைக் கொண்டு வர சுறுசுறுப்புடன் முயற்சி செய்யத் தூண்டுகிறேன். உலகில் ஓவரு நபரும் அமைதியாக இல்லையென்றால், அமைதி முழுமையடையாது.

மூன்று நிலையில் அமைதித் தேவை - முதலில் நமக்குள் இருக்கும் அமைதி. நம் எல்லோருக்கும் மனதில் இது இருக்க வேண்டும். இதனால் செய்யும் செயலில் சுறுசுறுப்பாக இருக்க முடியும், எண்ணங்களில் சக்தி இருக்கும். இரண்டாவது, நம் சுற்று வட்டாரத்தில் அமைதி, நண்பர்கள், குடும்ப அங்கத்தினர், வேலை சீயும் இடம் இவற்றில் அமைதி இருக்க வேண்டும். மூன்றாவது, மிக முக்கியமானது நாடுகளுக்குள் அமைதி இருக்க வேண்டும்.

கலாச்சாரங்களுக்குள் இடையே இருக்கும் சுவருகளை உடைக்கவும், பல்வேருத்தனத்தை கொண்டாடவும் இப்பொழுது நேரம் வந்து விட்டது. இளைஞர்களுக்கு ஊக்கமளித்து, கட்டுப்படுத்தப்பட்ட அடையாலங்களிளிற்கு மேல் பார்க்கவும், நாம் எல்லாம் ஒரே "மனித இனத்தை" சேர்ந்தவர் என்னும் என்னத்தை வளர்க்கவும் நேரம் வந்து விட்டது. இப்படித்தான் வன்முறையற்ற மனச்சொர்வ்ற ஒரு சமூகத்தை நம்மால் உருவாக்க முடியும்.

No comments:

Post a Comment