Sunday, October 30, 2011

நவ.11ல் ரவிசங்கரின் வாழும் கலை பயிற்சி தொடக்கம்


நவ.11ல் ரவிசங்கரின் வாழும் கலை பயிற்சி தொடக்கம்
அக்.29, 2011

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நேரடியாக சுதர்சன் கிரியா பயிற்சியை நவம்பர் 11-ம் தேதி தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது.

இதுகுறித்து வாழும் கலை அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுமார் 20 வருடங்களுக்கு பிறகு , வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், வாழும் கலைப் பயிற்சி முதல் பாகம் மற்றும் சுதர்சன் கிரியா நேரடியாக கற்றுத்தர உள்ளார். இந்தப் பயிற்சி  பெங்களூருவில் உள்ள சர்வதேச வாழும் கலை மையத்தில் நவம்பர் 11 முதல் 13 வரை 3  நாட்கள் நடைபெற இருக்கிறது.

ரவிசங்கர் கற்றுத் தர இருக்கும் இந்த பயிற்சி உடலுக்கும், மனதுக்கும் நல்ல ஒய்வு, புத்துணர்ச்சி, தியானம் மூலம் அமைதி மற்றும் பல்வேறு கலந்துரையாடல்கள் ஆகியவைகளின் அற்புதமான கலவையாகும்.

ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய 6 மொழிகளில் நடத்தப்பட இருக்கும் இந்த பயிற்சியை சர்வதேச வாழும் கலை மையத்தில் தங்கியும் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது .

"சுதர்சன் கிரியா பயிற்சியின் ஆதாரமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரிடம் இருந்தே அதை கற்றுகொள்வது, வாழ்வில் ஒரே ஒரு முறை கிடைக்கும் ஒரு அறிய வாய்ப்பாகும்," என்று சர்வதேச வாழும் கலை அமைப்பின் இயக்குனரான சத்யோஜதா கூறினார்.

"நான் இந்த அறிய வாய்ப்பிற்காக 11 வருடங்கள் காத்திருக்கிறேன். உலகின் மிக சிறந்த ஆசிரியரே சுதசர்சன கிரியா கற்றுத்தர இருக்கும்போது யார் அந்த வாய்ப்பை தவற விரும்புவார்கள்" என்று ஞான தேஜ் கூறினார்.

கடந்த 1981 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் பத்ரா நதிக்கரையில் 10 நாட்கள் மௌனத்துக்கு பிறகு, ரவிசங்கர் சக்தி வாய்ந்த , தாளத்தை அடிப்படையாக கொண்ட மூச்சு பயிற்சியான சுதர்சன் கிரியா அவருக்கு தோன்றியது. அதோடு வாழும் கலை என்ற அமைப்பும் தோன்றியது.

சுதர்சன் கரிய பயிற்சி மேற்கொண்டவர்களுக்கு, மன அழுத்தத்திற்குரிய ஹார்மோன்களான "கார்டிசால்"- இன் அளவு மிகபெரிய அளவில் குறைந்து இருக்கிறது என்று பல்வேறு தனிப்பட்ட மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

மன அழுத்ததிலிருந்து விடுபட்டு, மன அமைதியை பெற இந்த பயிற்சி வழிவகுக்கிறது. மேலும் இந்த மருத்துவ ஆராய்ச்சியில் , இரத்தத்தில் உள்ள LDL எனப்படும் பாதிப்பை ஏற்படுத்தும் கொழுப்புகளை குறைக்கவும், HDL எனப்படும் நல்ல கொழுப்புகளை அதிகரிக்கவும் செய்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

www.vvmvp.org என்ற இணைய தளத்தில் இந்த பயிற்சிக்கு பதிவு செய்யலாம்.

இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment