Sunday, August 25, 2013

தமிழ்சங்கமம் 2013 - குருஜி பூஜ்ய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்களுடனான கேள்வி பதில்


தமிழ்சங்கமம் 2013

      ஆகஸ்ட் -17.ல்  - வாழும்கலை பெங்களூரு  ஆஸ்ரமத்தில் நடந்த தமிழ்சங்கமம்  2013 நிகழ்ச்சியில் குருஜி பூஜ்ய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்களுடனான  கேள்வி பதில் உரையாடல்

எழுத்துருவம் : திரு பிரகாசம் அவர்கள்

கேள்வி(அருட்தந்தை திரு.பெலிக்ஸ் அலெக்சாண்டர்):

நான் பத்து வருடங்களாக வாழும் கலை பயிற்சி செய்துகொண்டுவருகிறேன் .எட்டு வருடங்களுக்கு முன் தங்களை  பெங்களூர் ஆஸ்ரமத்தில் சந்திக்கும்  பெரும் பாக்கியம் கிடைத்தது. மிகப்பெரிய ஆன்மீகவாதியான தாங்கள், மிக எளிமையாக பொறுமையாக  என்னோடு பேசிய கணங்கள் மறக்க முடியாது. ஆன்மீகவாதியாக உங்களை ஒதுக்கிக்கொள்ளாமல் ,சமூக காரியங்களுக்காக ஈடுபடும் தங்களின் பாங்கு பெருமைப்படத்தக்கது.தங்களிடம்  ஒரு கேள்வி .

ஒவ்வொரு மதமும்  சந்திக்கக்கூடிய  பிரச்சினை  அது அரசியலுடன் ஓட்டுவங்கியை  பெருக்கிக்கொள்ள பயன்படுத்தப்பட்டு, மதம் என்றால் வன்முறை ,தீவிரவாதம் என்று தவறாக பார்க்கும் நிலை வந்துவிடுமோ என பயம் வருகிறது. எப்படி இதை சரி செய்வது?

குருஜி: நீங்கள் சொல்வது  நூற்றுக்கு நூறு உண்மை. அப்படி நடப்பதால்தான் நம் நாட்டில் மதத்தின் மீது வெறுப்பு  உண்டாகிறது. ஆனால்,நம் நாடு ஆன்மீகத்தில் பலமாக இருப்பதால்  நாம் அனைவரும் சேர்ந்து செயல்பட்டால்  அரசியலையும் மதத்தையும் தனித்தனியாக வைக்கமுடியும்

இலங்கைத்தமிழர்  துயரம் நீங்க என்ன செய்யலாம்?

குருஜி:இலங்கைத்தமிழர் நிறையத் துன்பத்தை அனுபவித்திருகிறார்கள். அவர்களுக்கு  ஒரு ஆறுதலும்  புத்துணர்ச்சியும்  அவர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும் என்ற நம்பிக்கையும் கொடுக்கவேண்டும் . இதற்கு  எல்லோரும் சேர்ந்து முயற்சி செய்வோம்.

கேள்வி: நலிந்துவரும் மனிதநேயத்தை  வளர்ப்பது எப்படி?

குருஜி:ஆன்மீகத்தால்தான் முடியும்.மனிதநேயம்  ஆன்மீகமில்லாது வளர முடியாது. நான் யார்? என்பதும், உலகம் என்ன? என்பதும் தெரிந்துகொள்வதே ஆன்மீகம்.இந்த கேள்விகள் நம்முள் தொடர்ந்து வந்தால்  நமக்குள்  ஆன்மீக நிலை பெருகும்.மனதில் நிம்மதிவரும். நிபந்தனையற்ற அன்பும் பரந்த மனப்பான்மையும் உண்டானால் மனிதநேயம் தானாக வரும்.பரந்த மனப்பான்மையுண்டாக  என்ன செய்தாலும்  அதன் பெயர் ஆன்மீகம்.பயமில்லாது எல்லாரையும் நேசிக்கும் தன்மை வேண்டும்.

கேள்வி:    பூஜையின்போது இஸ்லாமியரும் உங்களை அன்போடு வணங்குவதைப் பார்த்தேன். எப்படி அது சாத்தியம்?
குருஜி:  அன்புக்கு மதமில்லை.உண்மைக்கு ஒரு மதமில்லை;.ஒரு குலமில்லை.; கோத்திரமில்லை; .சாதியில்லை. .அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ  அதைச் செய்கிறார்கள். நான் எப்போதும் எதையும் செய்யுங்கள் என்று சொன்னதில்லை. அவர்கள் செய்வது இறைவனாகக் கொடுத்த எண்ணம். வணங்குகிறவர்கள் தங்கள் பெருந்தன்மையை காட்டுகிறார்கள். யாரை வணங்குகிறோம் என்பது முக்கியமில்லை. நம் நன்றியை தெரிவிக்கவே  வணங்குகிறோம். தூணிலும் துரும்பிலும்  இருக்கும் எம்பெருமானை வணங்குகிறோம். எங்கு யார் என்பது  முக்கியமில்லை.;.வணங்குவதுதான் முக்கியம்.

கேள்வி:  (வீரகேசரி பத்திரிக்கை ஆசிரியர்  திரு.தேவராஜன்.)  நீங்கள் மதவாதியல்ல.  மதம், மொழி  கடந்தவர்..உலகின் அனைத்து  பகுதியுள்ளும் வாழும் இந்து மக்களை ஒன்றிணைக்கும்  இந்து உலகப்பேரவை  என்ற அமைப்பை   ஆரம்பிக்க முன்வர வேண்டும் . அப்போதுதான்  இந்து மதம்  வளர்ச்சியடைந்து தழைதோங்க உதவும்    அது அரசியல், மொழிகடந்ததாக இருக்கவேண்டும். இதில் உங்கள் நிலை என்ன?

குருஜி:  உங்கள் எண்ணம சரிதான்.  இந்து மதம்   சாதி சாதியாக பிரிந்து  சிதறி கிடக்கிறது. எல்லாரையும் சேர்த்து அணைத்து  எம்மதமும் சம்மதம்  என்ற எண்ணம்  வரவேண்டும். இந்து மதத்தை காப்பாற்ற எல்லாரும்    முயற்சி  செய்ய வேண்டும். இந்து மதத்தின் கசடுகளை  நீக்கி  சாதி விளக்கி, ஒரே சாதி மனித சாதி .யான்பெற்ற இன்பம் எல்லாரும் பெறட்டும் என்ற   கொள்கையை நிலை நாட்டவேண்டும் .எல்லா இளைஞருக்கும் இதில் பொறுப்புண்டு .இந்துமதத்தில் ஊறுகாய் மாதிரி  இருக்கவேண்டியது உருவ வழிபாடு .மனிதத்தன்மை  வேண்டும்.உருவவழிபாடும் வேண்டும் ஆன்மீகமும் வேண்டும். அருட்பெரும் ஜோதி ! தனிப்பெரும் கருனண!  .தமிழகத்தில்  உள்ள கோவில்கள், சிலைகள் , கலாசாரம் உலகில் வேறெங்கும் இல்லை . தமிழகரசின்  சின்னம்கூட கோயிலின் கோபுரம்தான்.  கோயில்களையும் கப்பலையும்(நாவாய்) உலகிற்கு முதழில் கொடுத்தது தமிழகம்தான்.

கேள்வி: தமிழக அரசியல்வாதிகள்  தங்கள் குடும்பத்துக்கு சொத்து சேர்க்கும் நிலை எப்போது மாறும்?

குருஜி: அது ஒரு விதமாக மாறிவிட்டது என்றே நினைக்கிறன் ஜனநாயகம் என்றால் மாற்றம் இருக்க வேண்டும். ஊழல்  ஒழிய  மாற்றம் கொண்டுவர இளைஞர்கள்  முன்வரவேண்டும்.மியரும்

கேள்வி: குருஜி தங்களின் நிறைவேறாத ஆசை இருந்தால் சொல்லுங்கள் . நான் நிறைவேற்றுகிறேன்

குருஜி: நம் மக்கள் முகத்தில் புன்னகை வர  ஆசைப்படுகிறேன்




கேள்வி :குடும்பத்தில் எப்படி எல்லோருடைய  பிழைகளையும் சகித்துக்கொண்டு  அனுசரித்து போவது எவ்வாறு?
குருஜி:குடும்பம் என்றால்  பலவித மனிதர்கள்  இருப்பார்கள். பல எண்ணங்கள்  இருக்கும். எல்லோரையும் சேர்த்து  அநுசரித்து  போவதற்கு  பரந்த மனப்பான்மை வேண்டும் ,பொறுமை வேண்டும், மற்றவர்களை  புரிந்து கொள்ளும்  தன்மை வேண்டும். இதற்கு  தியானம்  செய்துவந்தால்  எல்லாம் சாத்தியம் ஆகும் . .மற்றவர்களை  புரிந்துகொள்ளாவிட்டால் தகராறுதான் வரும். அவர்களும் மாற கொஞ்ச காலம் தேவை. பால் தயிராக  சில மணி நேரங்கள்  ஆகும். தயிர்  வெண்ணையாக  சில மணி நேரமாகும். அதுபோல  மனிதர்கள்  மாறுவதற்கும் கொஞ்ச காலம்  பொறுத்திருப்போம் .
கேள்வி: மனிதனின் பரிணாம வளர்ச்சியில்  குருவின் பங்கு என்ன?
குருஜி:  ரசம் செய்ய  தண்ணீரின் பங்கு என்ன என்று கேட்டால் எப்படி சொல்ல? தண்ணீரின்றி  ரசம் செய்ய முடியுமா?
கேள்வி:காமத்தை தியானத்தால்  கட்டுப்படுத்த முடியுமா?
குருஜி: பிராணாயாமத்தால்  நிச்சயம்  கட்டுப்படுதமுடியும்.


கேள்வி :மரணத்தை வெல்வது எப்படி?
குருஜி: நம் நிழலை  அழிப்பது எப்படி என்று  கேட்கிறமாதிரி இருக்கிறது.நம் நிழலை அளிக்க முடியுமா? முடியும். நம்மை சுற்றி  ஒரு ஒளி  இருந்தால் நிழல் இருக்காது.அதே மாதிரி  ஞானத்தால்  மரணத்தை வெல்லமுடியும்.  உடலுக்கு மரணம் வந்தே தீரும். எனக்கு (ஆன்மாவிற்கு ) மரணம் இல்லை என்பதை ஞானத்தால் உணர முடியும்.உடலில் இருக்கும் நோயை குறைத்து ஆயுளை விருத்தி செய்யலாம். அதற்கு சித்தா , ஆயுர் வேதா  வைத்தியம்  உண்டு. தமிழகத்தில்  மிகச்சிறந்த சித்தா மருத்துவ முறையை   மூடி வைத்திருக்கிறோம் .யாரும் அதிகம் கண்டு கொள்வதில்லை. எல்லோரும் அதை பயன்படுத்த வேண்டும். உலகில் மிக உயர்ந்த ஸ்தானம்  பெற்றிருக்கும்  ஆயுர்வேத மருத்துவமும் பல உடல் நோய்களை    குணமாக்கும் தன்மையுடையது. அங்கு உடல் சரி செய்யப்படுகிறது. இங்கு வாழும் கலையில் மனம் சரி செய்யப்படுகிறது. ஆன்மா சரியாக உள்ளது..

கேள்வி:சைத்தன்யம் என்றால் என்ன?

குருஜி:எதனால் கேள்வி கேட்கிறீர்களோ , எந்த உயிரால்  நான் சொல்லும் பதிலை க்ர்த்கிரீர்களோ  அதுவே சைத்தன்யம். சைத்தன்யம்  இல்லையென்றால்  கேள்வி கேட்கமுடியாது. நான் சொல்லும் பதிலை கேட்கவும் முடியாது.

கேள்வி:  உடல் எடை குறைக்க முடியுமா?
குருஜி: நிச்சயம்   குறைக்க முடியும். லிவிங் வெல்   பயிற்சியில்  கலந்து கொள்ளுங்கள்.

கேள்வி: சரியாகச் சொல்லுங்கள்.  நாம் எங்கே போகிறோம்? எங்கே வழி நடத்துகிறீர்கள்?

குருஜி: எங்கே போகணுமோ   அங்கேதான் போய்க்கிட்டு இருக்கிறோம் . எங்கே போகக்கூடாதோ  அங்கெ போகாமல் தடுத்துக்கிட்டிருக்கிறோம். கவலையே வேண்டாம்  நம்ம ரயில் நன்கு  தண்டவாளத்திலேயே  ஓடிக்கொண்டிருக்கிறது.

கேள்வி:ஆசை என்னும் பேராசையால்  வாழ்க்கை  தடைப்படுமா?

குருஜி:வாழ்க்கையில் சின்ன சின்ன ஆசைகள் இருக்கட்டும்.ஆனால்  அது பேராசையாக வேண்டாம். பேராசையால் பெருந்துன்பம் வந்து சேரும்.  அதற்குப்பதில்   பெரிய ஆசை  இருக்கட்டும்.


கேள்வி: ஏசுபிரான்  சிலுவையில் அறையபட்டபோது   "பிதாவே எனது ஆவியை  உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன் "  என்று கூறியது பற்றி  என்ன சொல்கிறீர்கள்?

குருஜி: ஏசு பிரான்   வாழ்கையின் சாரமே அன்பு தான் .  நானும் பிதாவும்  ஒன்றே  என்பதே   அதன் அர்த்தம. வேதங்களும் "நானும் பிரம்மாவும்  ஒன்றே " என்கிறது. உண்மை ஒன்று. உலகம் ஒன்று. கடவுள் ஒன்று.



கேள்வி: நீங்கள் விஷ்ணுவின் அவதாரம் என்கிறார்கள். அப்படியானால் நாங்கள் யார்? எதனால் இந்த பிறப்பு?

குருஜி: நான் யார்? நீங்கள் யார்? எனக்கேட்க வேண்டாம். நாம் எல்லோரும் ஒன்றுதான். நான் வேறு நீங்கள் வேறு அல்ல . நான் உங்களின் அம்சம் .நீங்கள் என்னுடைய அம்சம் நான் உங்களோடு இருக்கிறேன். நீங்கள் என்னோடு இருக்கிறீர்கள்.அவ்வளவுதான்.

கேள்வி:யோகவஷிச்டத்தில்  பிரம்மா,விஷ்ணு,சிவா  என மூவர் பற்றியும்  சங்கல்பா  பற்றியும்  சொல்லியிருப்பது குழப்பமாக உள்ளதே?

குருஜி: யோகவஷிச்தம்  மிக ஆழமான  பொருள் பொதிந்த ஞானம. முதலில் படித்தால் குழப்பம் வரும்.பழைய  ஞானங்களை  உடைத்தெறியும். புதிய ஞானம பிறக்கும்  ஆனால் நிறைய தடவைகள் படித்தால்  மட்டுமே உண்மை உணர முடியும். இது உயர்ந்த கணித சூத்திரம் மாதிரி. ஆங்கிலத்தில் கூட இன்செப்ஸன் , மாட்ரிக்ஸ்   போன்ற  பெரிய  திரை படங்கள்  யோகவஷிச்தத்தை  அடிப்படையாக கொண்டே  உருவாகப்பட்டுள்ளன. அது ஆழ்ந்த மெய்யுணர்வை  அடிப்படையாக கொண்டது.ஒரு தடவை படித்தல் புரியாது.

கேள்வி:மனது எங்கே இருக்கிறது?

குருஜி; மனது உடம்பில் எங்கே இருக்கிறது என் ஆராய்ச்சி செய். தலையா?மூளையா? இதயமா? பரிசோதனை செய்துபார்.  

No comments:

Post a Comment