வாழும் கலை அமைப்பின் நிறுவனர் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் 2012 புத்தாண்டு வாழ்த்து செய்தி .
குருஜி ! இந்த புத்தாண்டில் தாங்கள் தரும் செய்தி என்ன ? நாங்கள் இந்த புது வருடத்தில் எடுக்க வேண்டிய தீர்மானம் எதை சார்ந்து இருக்க வேண்டும்?
சிறந்த உலகம் அமைய பாடுபட வேண்டும். நம்முடைய சேவை முழுவதும் சிறந்த உலகம் மற்றும் சிறந்த சமுதாயம் அமையும் வகையில் இருக்க வேண்டும். அதே பொழுது , தனி மனித வாழ்க்கையில் ஒவ்வருவரும் எல்லாம் நல்லதே நடக்கும் என்ற திடமான நம்பிக்கை வைக்க வேண்டும். நீங்கள் கேள்வி பட்டிருக்கலாம் , மயன் நாகரீக நாள்காட்டி படி 2012 தான் கடைசி வருடம், மேலும் இந்த வருடத்தில் உலகத்துக்கு அழிவு வர இருக்கிறது என்று குறிப்பிடப்ட்டிருகிறது. அது சம்பந்தமாக பல திரைப்படங்கள் கூட வந்திருகின்றன. அது போல் எதுவும் நடக்க போவதில்லை என்று நான் உறுதியாக கூறுகிறேன். உலகம் தொடர்ந்து இயங்கி கொண்டுதான் இருக்கும்.
வேதத்தை அடிப்படையாக கொண்ட நாள்காட்டி படி, மார்ச் மதத்திற்கு பிறகு வரும் வருடத்தின் பெயர் "நந்தா" . நந்தா என்றால் ஆனந்தம் என்று பொருள். ஆனந்தத்தின் வருடமாக அது அமையும். முதில் வருவது ஆனந்தம் , அதன் பிறகு வரும் வருடம் வெற்றி. எனவே வரும் வருடத்தில் நீங்கள் அனைவரும் சந்தோசமாகவும், வெற்றியாளர்களாகவும் இருப்பீர்கள். கவலை படவேண்டாம். இந்த சமுதாயத்தில் ஏதாவது நல்லது செய்ய அனைவரும் தீர்மானம் எடுக்கவேண்டும். ஞானத்தை அனைவரும் பெரும் படி செய்ய வேண்டும். வரும் ஆண்டின் இறுதிக்குள் நிறைய மனிதர்கள் ஆன்மிகம் மற்றும் மனிதநேய சிந்தனைகள் பக்கம் ஈர்க்கபடுவதை நீங்களே கண்கூடாக பார்க்கலாம். தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் அனைவரும் ஓரங்கட்ட படுவார்கள். வன்முறையாளர்களின் குரல் ஒடுக்கப்படும். அவர்களின் வலிமை குறையும். இது கண்டிப்பாக நடக்கும். அது நடைபெறுவதற்கு நீங்கள் அனைவரும் ஒரு பங்காக இருப்பீர்கள்.
No comments:
Post a Comment