இந்தியாவால் ஊழலும் வறுமையும் மட்டும் இல்லை , மேலும் பல நல்ல விஷயங்களை இந்த உலகத்திற்கு தரமுடியும் என்பதற்காக உலக பிரசித்தி பெற்ற ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள்
ஜெர்மன் நாட்டின் பெர்லின் நகரில் "உலக கலாச்சார திருவிழா" என்ற பிரம்மாண்டமான நிகழ்ச்சியை நடத்துகிறார்கடந்த பல வாரங்களாக நடைபெற்று கொண்டிருக்கும் நிகழ்வுகளால் , இந்தியாவின் கெளரவம் தகர்ந்து கொண்டிருக்கும் பொழுது , இந்தியாவால் ஊழலும் வறுமையும் மட்டும் இல்லை , மேலும் பல நல்ல விஷயங்களை இந்த உலகத்திற்கு தரமுடியும் என்பதை உணர்த்தும் விதமாக பல நல்ல நிகழ்வுகள் நடக்க இருகின்றன. அத்தகைய பேரு நிகழ்வு தான் ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலை அமைப்பின் 30 வது ஆண்டு விழா. பெர்லின் நகரில் நடக்க இருக்கும் உலக கலாச்சார திருவிழாவில் உலகின் 151 நாடுகளிலிருந்து சுமார் ஒரு இலட்சம் மக்கள் கலந்து கொண்டு இந்திய ஆன்மீகத்தின் மூலமாக ஒரு மறக்க முடியாத அனுபவத்தை பெற இருக்கிறார்கள். பெர்லினின் ஒலிம்பியா ஸ்டேடியன் நடக்க போகும் ஐந்தே இரண்டு நாள் உலக கலாச்சார திருவிழா நிகழ்வில் பல நாடுகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றாலும், அனைவரின் கண்களை கவர இருப்பது , பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைக்கும் இந்தியாவின் ஆன்மீக சக்தியாகும்.
பல கண்டங்களிருந்து , பல மதங்களிலிருந்து, பல பண்பாடுகளிலிருந்து மற்றும் பல்வேறு பின்னணி உடைய சுமார் 70000 பேர் ஒரே இடத்தில அமர்ந்து உலக அமைதிகாக தியானம் செய்ய போகும் நிகழ்ச்சி ஒரு அற்புதமான , கண்கொள்ளா காட்சியாகும். இந்த சில நிமிட நிசப்தமான அமைதியால் , ஹிட்லர் , லேடன் போன்றோரால் உருவாக்கப்பட்ட பிரிவினைகள் அழிக்கப்பட இருக்கிறது.
இத்திருவிழா பல நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் நிகழ்வோடு மட்டுமல்லாமல் , இந்தியாவின் பெருமையான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக அமையும். மேற்கத்திய நாடுகள் இந்தியாவை பற்றி பல காலமாக வைத்திருக்கும் பிம்பத்தை உடைத்தெறிந்து, இந்தியா, உலகையே அதிர செய்யும் ஒரு செழிப்பான நாடு என்று பறை சாற்றும் விதமாக , யோகா பூங்கா , யோகாவின் தோற்றத்தை பிரதிபலிக்கும் யோகா அருங்காட்சியகம் , இசையோடு கூடிய சூரிய நமஸ்காரம் , தொன்மையான சமஸ்க்ருத மந்திர உச்சரிப்போடு கூடிய பாரம்பரிய இந்திய ராகங்கள் மற்றும் தமிழ் கலைஞ்சர்களின் நாதஸ்வரம், தவில் போன்ற இந்தியாவின் அறிய பொக்கிஷங்களையும் வெளிபடுத்தும் விதமாகவும் இது அமையும்.
இதுவே ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் வாழும் கலையின் 30 வது விழாவை பெர்லின் நகரில் நடத்த காரணமாக இருப்பதாக தெரிகிறது. கடந்த பல வருடங்களாக ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் , இந்தியாவின் தொன்மையான ஞானத்தை , மிக எளிதான முறையில் கற்று கொடுபதற்கு பல நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார். ஐரோப்பா மற்றும் உலகில் உள்ள மற்ற நாடுகளில் உள்ள பெரும்பான்மயோர் ஸ்ரீ ஸ்ரீ அவர்களை பின்பற்றுகிறார்கள். அவர்கள் அவரை ஓர் அமைதி தூதுவராக காண்பதோடு மட்டுமல்லாமல் , அவர்கள் திருவிழாவில் காணும் எல்ல நல்ல விஷயங்களையும் இந்தியாவோடு தொடர்பு படுதுகொள்வார்கள். இது இந்தியாவை பற்றி தற்போது இருக்கும் கண்ணோட்டத்தை மாற்றி ஒரு நல்லவிதமான பெருமையை தரும் என்பது உறுதி.
அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் திரு.
டோனி டேவிஸ் , ஜெர்மன் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஜேன்ஸ் ஆக்கர்மேன் , இராக் நாட்டின் கலாச்சார துறை இணை அமைச்சர் திரு. ஜாபூர் முஹம்மது அப்பாஸ் , ஆப்கானிஸ்தான் அமைச்சர் சேட் மக்ஹ்தூம் ரகீன் , ரஷ்யாவின் வெளிவிவாகாரத்துறை இணை அமைச்சர் திரு. அனடோலி சபோநோவ் , பங்களாதேஷ் நாட்டின் கலாச்சார துறை அமைச்சர் திரு. அபுல் கலாம் ஆசாத் மற்றும் லிதுவேனியா நாட்டின் முன்னாள் பிரதம மந்திரி திரு. வ்யுடுடஸ் லண்ட்ச்பெகிஸ் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கும் முக்கிய விருந்தினர்கள் ஆவர். இவர்கள் இந்தியாவின் நல்ல விஷயங்களை உலக மக்களுக்கு எடுத்துரைப்பதில் ஒரு கருவியாக இருப்பார்கள் . இவர்களோடு பல தொழிலதிபர்கள் , கல்வியாளர்கள் , தொண்டு நிறுவன பிரதிநிதிகள், ஆன்மீக தலைவர்கள், மதத்தலைவர்கள் மற்றும் அமைதி தூதுவர்கள் ஆகியோர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்தியாவின் பிரகாசமான பக்கங்களை உலகிற்கு எடுத்துக்காட்ட ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் மீண்டும் ஒரு முறை செயல்பட்டிருக்கிறார் .உலகளாவிய விதத்தில் உலக கலாச்சார திருவிழாவை நடத்துவதின் மூலமாக , ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் இந்தியாவை பல்வேறு இதயங்கள் ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்பதற்கு ஒரு தூண்டுகோலாக இருக்கிறா
No comments:
Post a Comment