Tuesday, June 28, 2011

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களுக்கு பெல்ஜியத்தின் கௌரவமான கிரான்ஸ் மோன்டனா விருது

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களுக்கு பெல்ஜியத்தின் கௌரவமான கிரான்ஸ் மோன்டனா விருது 
வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் பெல்ஜியத்தின் கிரான்ஸ் மோன்டனா விருது பெரும் முதல் இந்தியர் ஆவார்.
பெங்களுரு , கர்நாடகா ஜூன் 25 2011

ஜூன் 24 ம் அன்று பெல்ஜியததில் வழங்கப்பட்ட இந்த விருதை பெரும் முதல் இந்தியர் என்ற பெருமையை அடைகிறார் .இந்த விருதை வழங்கி பேசிய இந்த பேரவையின் நிறுவனரான திரு. ஜீன் பால்  கார்டேரோன் குருஜியை பற்றி குறிப்பிடும்பொழுது  " ஸ்ரீ ஸ்ரீ , நீங்கள் எங்கெல்லாம் குழப்பமான சூழ்நிலையில் உள்ள மக்களுக்கு ஒரு தீர்வாக இருக்கிறீர்கள்" என்று கூறினார். 1989  ஆம் ஆண்டிலிருந்து  இந்த உயரிய விருது அமைதி , ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றுக்காக போராடும் தனிமனிதர்களுக்கு வழங்கபடுகிறது .

சில நாட்டின்  ஜனாதிபதிகளும் மற்றும் பிரதம மந்திரிகளும் இந்த விருதை பெற்றிருகிரர்கள் . அமெரிக்க நாட்டின் அதிபர் பாரக் ஒபாமா , போர்சுகல் நாட்டின் முன்னாள் பிரதம மந்திரியும் மற்றும் இந்நாள் ஐரோப்பிய குழுவின் அதிபரும்  திரு. ஜோஸ் அனுவேல்  பர்ரோசோ , பின்லாந்த் நாட்டின் தற்போதைய அதிபர் திரு. தர்ஜா ஹலோனேன் , ஆப்ரிக்கன் டெவெலப்மென்ட் வங்கியின் அதிபர் டானல்ட் கபெருக, ஜெர்மனி நாட்டின் துணைவேந்தர்  திருமதி அஞ்செலா மெர்கல்  ஆகியோர் இந்த விருது பெற்ற சில முக்கியமானவர்கள் .

" நாளைய புதிய உலகை வடிவமைத்தல் " அதாவது உலகில் உள்ள பொதுவான பண்புகளை அடையாளம் கண்டு செயல்படுத்துதல் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் மன அழுத்தமற்ற , குற்றமற்ற உலகை உருவாக்கும் தனது நோக்கத்தை வலியுறுத்தினார். ஸ்ரீ ஸ்ரீ யின் "உலகம் ஒரே குடும்பம் என்ற தத்துவமும், கடந்த முப்பது வருடங்களாக மனித பண்புகளை மலர செய்வதற்காக அவர் மேற்கொண்ட பணிகளும் 151 நாடுகளில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குருஜியின் "உள் அமைதியிலிருந்து வெளி அமைதி " என்ற கொள்கையை ஆப்ரிக்கா பழங்குடியினர்  , இந்தியாவின் பல கிராமங்கள், ஈராக் நாட்டின் இளைஞர்கள் மற்றும் போஸ்னியா , கொசோவோ நாடுகள் எற்றுகொண்டுள்ளன

வாழும் கலை அமைப்பு தனது முப்பது வருட மனித குல சேவையை "உலக கலாச்சார திருவிழா " வாக  ஜூலை 2 மற்றும் 3  ஆகிய நாட்களில் பெர்லின் நகரில் கொண்டாடுகிறது. இந்த வாழும் கலை அமைப்பு, முரண்பாடான கொள்கைகள் உள்ள நாடுகளில் உள்ள மனிதர்களுக்கு பேரிடர் மற்றும் மன அழுத்தம் போக்கி , மன வலிமையை அளிக்கவும், வன்முறையில் பாதிக்கப்பட்டோர் மற்றும் சிறைக்கைதிகளுக்கு மறு வாழ்வு அமைக்கவும், பல்வேறு திட்டங்கள் மூலமாக உதவுகிறது . மன அழுத்தத்தை நீக்கி, மனதை அமைதி படுத்த யோகா , தியானம் மற்றும் மூச்சு பயிற்சியும்  இந்த அமைப்பு கற்று தருகிறது. இதில் ஆரோகியத்தை மேம்படுத்தும் மூச்சு பயிற்சியான "சுதர்சன கிரியா " என்ற சிறப்பு பயிற்சியும் உள்ளடங்கும். வாழும் கலை அமைப்பு ஐக்கிய நாடுகளின் சமூக மற்றும் பொருளாதார அமைப்பில் சிறப்பு ஆலோசகர் தகுதியும் பெற்றுள்ளது. ஆரோக்கியம், கல்வி மற்றும் நிலையான முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்ட பல்வேறு சர்வேதேச அமைப்புகள் மற்றும் குழுக்களிலும் இடம் பெற்றுள்ளது












No comments:

Post a Comment