தேவலோகம்
சொர்க்கம் எப்படி இருக்கும் என்று கற்பனையில் மட்டுமே பார்த்த நமக்கு தேவலோகத்தை சொர்கத்தை காட்டிய பெருமை சொர்கத்திலே மூன்று நாட்கள் தெய்வத்தோடு வாழவைத்த பெருமை வாழும் கலையின் நிறுவனர் குருஜி ஸ்ரீஸ்ரீ அவர்களையே சாரும்.155 நாடுகளை சேர்ந்த 35 லட்சம் மக்களை எந்த வித பாகுபாடுகளும் இல்லாமல் அனைவரையும் 3 நாட்கள் ஒரே இடத்தில் சேர வைத்த இருக்க வைத்த பெருமையும் குருஜி அவர்களையே சாரும் என்பதில் மாற்று கருத்து இல்லை.முதல் நாள் முதல் மூன்றாம் நாள் முதல் எத்தனை எத்தனை வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் உலக நாடுகள் முழுவதும் இருந்து வந்த லட்ச கணக்கான மக்களை தலைவர்களை மகிழ்விக்க ஆயிர கணக்கான கலைஞர்கள் பங்கேற்ற கண்கவர் கலைநிகழ்ச்சிகள் என திருவிழா கோலம் பூண்டது நமது தலை நகர் டெல்லி.எந்த ஒரு சிறிய விஷயம் நடந்தாலும் அதற்க்கு கடவுளின் ஆசிர்வாதமும் குருவின் ஆசிர்வாதமும் அவசியம் . அப்பேற்பட்ட மகிமை பொருந்திய அந்த குருவே ஏற்பாடு செய்த இப்பேற்பட்ட உலக வரலாற்று மிக்க சிறப்பு நிகழ்வுக்கு இயற்கையின் ஆசிர்வாதமும் கடவுளின் ஆசிர்வாதமும் கிடைக்காமல் இருக்குமா அதுவும் கிடைத்தது மழையின் ரூபத்தில் இயற்கையும் கடவுளும் குருஜி மீது மழையாக பெய்து தங்கள் ஆசிர்வாதத்தை கொடுத்து இத்தனை புனிதமான ஒரு நிகழ்வுக்கு மேலும் புனிதத்தை சேர்த்தது ஒரு அறிய நிகழ்வு.அத்தோடு நிற்கவில்லை ஒவ்வொரு நாளும் உலகநாடுகளில் இருந்து வந்த கலைஞர்களின் கண்கவர் நிகழ்சிகளை பார்க்க கடவுளே வானவில்லாக வந்து பூமியிலே நடக்கும் இப்பேற்பட்ட விட விதமான வண்ணங்களுக்கு இணையாக வானத்தில் வானவில் தோன்றி பூமியும் வானமும் வண்ண மயமாக கட்சி அளித்தது மற்றுமொரு அறிய நிகழ்வு.ஒரு நாட்டில் இருந்து கொண்டு அவரவர் கலாசாரமே தெரியாமல் எத்தனையோ கோடி மக்கள் இருக்கும் போது, உலகம் முழுவதும் உள்ள மக்களின் பாரம்பரிய அரிய கலாசார நிகழ்வுகளை ஒரே இடத்தில் அதுவும் நம் இந்தியாவின் தலை நகரத்தில் எந்த வித சிறு அசம்பாவிதமும் இல்லாமல் நடத்திய பெருமையும் குருஜி அவர்களை மட்டுமே சாரும்.
பொதுவாகவே மனித இயல்பு எந்த ஒரு நல்ல நிகழ்வுகளையும் கெடுக்கவேண்டும் நடக்கவிடாமல் தடுக்கவேண்டும் என்று ஒரு சிலர் நினைப்பதுண்டு .இந்த அற்புதமான நிகழ்வுகளையும் தடுக்கவேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்ள பட்டன இயற்கையை சீரழித்து விட்டார்கள் ஒரு புகாரும் தரப்பட்டது.அவர்களுக்கு ஏனோ தெரியவில்லை இயற்கையை இயற்கையாக இருக்க வேண்டும் என்று குருஜி அவர்கள் உலகம் முழுவதும் மேற்கொண்ட நடவடிக்கைகள் எத்தனை எத்தனை என்று.அதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் எத்தனை எத்தனை என்று.இந்த உலக கலாசார விழாவை இந்தியாவில் நடத்தி ஒட்டு மொத்த நாட்டிற்கும் எவ்வளவு பெருமையை தேடி தந்துள்ளார் என்பது சிறிது யோசித்து பார்த்தால் மட்டுமே தெரியும். 500 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் ஒரு சாதாரண திருமண நிகழ்விர்க்கே எத்தனை மாதங்கள் கஷ்டப்பட்டு எத்தனை வேலைகளை செய்யவேண்டும். ஆனால் இப்பேற்பட்ட அரிய நிகழ்விற்கு உலக தலைவர்கள் அனைவரையும் வரவைத்து உலகம் முழுவதும் 35 லட்சம் மக்களை ஒரே இடத்தில் இருக்க வைத்து .பல்லாயிர கணக்கான இசை கலைஞர்களை இது வரை யாருமே பார்க்காத கலைகளை இங்கே நிகழ்த்தி இப்பேற்பட்ட ஒரு வரலாற்று நிகழ்வு இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் காண கிடைக்குமோ ??????? இந்த ஒரு அரிய நிகழ்விற்கு பின்னால் எத்தனை பேர் தங்களின் உடல் உழைப்பை கொடுத்திருப்பார்கள். இது நடந்து முடிந்த பின்னர் என்னக்கென்ன என்று செல்லமால் அந்த இடத்தை தூய்மைபடுத்த குருஜியே நேரில் சென்று அணைத்து ஏற்பாடுகளையும் செய்து உடனடியாக அந்த இடம் சுத்தம் செய்ய நடவடிக்கைகளையும் செய்துள்ளார் என்றால் அவரது எண்ணம் எப்பேற்பட்டதாக இருக்கும் என்பது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.அதனால் தான் உலகம் முழுவதும் உள்ள கோடிகணக்கான மக்களும் அரசியல் மற்றும் அனைத்து மதத்தலைவர்களும் குருஜி அவர்களை போற்றுகின்றனர் வரவேற்கின்றனர் அவரின் அறிவுரையை கேட்கின்றனர்.
ஜெய் குருதேவ்.
குருமூர்த்தி
சென்னை
9710282282